(தானனா தானன.. தந்த தான)
வாரிமீ
தாடுது..ரும்ப
தாக
...வாடுவோர்
நாடிடும்..அஞ்சல்
ஈவாய்
சாரியாய்
ஊழ்துயர்.. தந்த
போதுன்
...தாளதே
நானுணர்.. சிந்தை
யாவாய்
கோரியே
மாதவள்.. வந்தி
நாடும்
...கூலியா
ளாகுமுன்..அன்பு
என்னே!
ஆரியா
ஆதர..வென்று
மானாய்
...ஆலவாய்
மேவிய.. எம்பி
ரானே.
ஆரியன் - ஆசாரியன்; பெரியோன்.
ஓடுமே
தீவினை
யஞ்சி
யேதான்
...ஓதுமோர்
ஆதியு .னன்ப
தாலே
பாடுவோ
ராயிர
முன்ற
னாமம்
...பாகுசேர்
தேனத
னின்ப
மாமே
தோடுடை
யாயுனை
அன்று
நாவால்
...சூடுபா
மாலைசெய்
விஞ்சை
என்னே
ஆடுவாய்
வானெழில்
மிஞ்சு
மாடல்
...ஆலவாய்
மேவிய
எம்பி
ரானே.
மாறலா
தாடிடு .. மன்று
ளானே
...மாசிலா
மாமணி.. யென்று
மானாய்க்
கூறதாய்
மாதுமை..தங்கு
மீசன்
...கோலமார்
சோதியி.. .லின்பு
சேரும்
பேறதாய்
ஆகுமு.. .னன்பி .னாலே
...பீடதே
யாகிடும்.. தஞ்ச
மீவாய்
ஆறலை
வேணிய.. சுந்த
ரேசா
...ஆலவாய்
மேவிய.. எம்பி
ரானே.
மாறு=ஒப்புமை.
மோனமாய்
ஆலமர்.. கின்ற
தேவே
...மோகமோ
டாறையும்.. வென்றி
டேனோ?
கூனலாய்
வான்மதி.. கங்கை
சூடும்
...கோதிலா
வேணிய..னென்று
வேத
கானமாய்
ஓதிடும்.. அன்பர்
நேசா
...காவலாய்
ஆதர
மென்று
தாயும்
ஆனவா
மாதுமை.. பங்க .னாகி
...ஆலவாய்
மேவிய.. எம்பி
ரானே.
ஆதரம்=அன்பு, உபசாரம்
மோகமோ
டாறையும் = மோக, காம, லோப, குரோத, மத, மாச்சர்யம்.
பூரணா
நீறணி..கின்ற
ஈசா
...போதமே
நானறி..கின்றிலேனே
பாரமார்
ஊழ்தரு.. துன்பு
மாயும்
..பாதமே
நாடுயர்.. சிந்தை
ஈவாய்
காரணா
தீயெரி.. கின்ற
ஈமம்
...காதலோ
டாடிடு.. மன்ற
மாகும்
ஆரமாய்
மார்பிசை..கொன்றை
யோடே
...ஆலவாய்
மேவிய..எம்பி
ரானே.