(திருமுக்கால் அமைப்பில்)
திருநிறை
மதுரையில்
அருள்தரு
சிவனவன்
மருவுறு
மலரணி
வோனே
மருவுறு
மலரணி
வோன்கழல்
மனங்கொள
வருதுயர்
அழிவது
நிசமே....1
பணியணை
மதுரையில்
கயல்விழி
உமையரன்
துணிபிறை
சடையுடை
யோனே
துணிபிறை
சடையுடை
யோன்கழல்
தொழுதிட
தணியுறு
வினையது
சதமே....2
பணி
அணை = பாம்பு
அணையாகச்
சூழ்ந்த
மதுரை.
அறமலி
மதுரையில்
கலைவளர்
நிதியவன்
திறமிகு
நடமிடு
வோனே
திறமிகு
நடமிடு
வோன்கழல்
சிரம்கொளப்
புறமிடு
வினையதும்
பொடியே....3
மறைபுகழ்
மதுரையில்
வளர்தமிழ்
விழைபவன்
பிறைமிளிர்
சடையுடை
யோனே
பிறைமிளிர்
சடையுடை
யோன்கழல்
பிறவியின்
நிறைவினைத்
தருமொரு
நெறியே....4
புகழ்மிகு
மதுரையில்
முறைசெயு
மிறையவன்
திகழ்மதி
புனைசடை
யோனே
திகழ்மதி
புனைசடை
யோன்கழல்
சிரம்கொள
மகிழ்வுறு
நிலையதும்
வசமே....5
பொழில்நிறை
மதுரையில்
விழவினில்
திகழ்பவன்
எழில்விழி
நுதலுடை
யோனே
எழில்விழி
நுதலுடை
யோன்கழல்
விழைவுற
உழ்ல்வினை
அகன்றிடும்
உடனே....6
புனல்தவழ்
மதுரையில்
புகல்தரும்
துணையவன்
கனல்தவழ்
கரமுடை
யோனே
கனல்தவழ்
கரமுடையோன்கழல்
கருதிட
மனம்கொளும்
உயர்வுறு
மதியே....7
வலம்பெறு
மதுரையில்
விடையமர்
மறையவன்
பொலம்திகழ்
திருவுடை
யோனே
பொலம்திகழ்
திருவுடை
யோன்கழல்
புணையெனும்
பலம்தரும்;அறும்தொடர்
பவமே....8
வயம்நிறை
மதுரையில்
வரம்தரும்
இறையவன்
கயல்விழி
உமைபுடை
யோனே
கயல்விழி
உமைபுடை
யோன்கழல்
கைதொழல்
மயல்தரு
வினையறும்
வழியே....9
மொய்வள
மதுரையில்
சிறந்திட
முறைசெயும்
மெய்புனை
பொடியுடை
யோனே
மெய்புனை
பொடியுடை
யோன்கழல்
விழைவுற
எய்திடும்
உயர்வதும்
எளிதே....10
மொய் = பெருமை.