தணலார்
விழியன்
சடைசேர்
மதியன்
மணமாய்
மலராய்
வரமாய்க்
கனிவான்
கணமே
நினைவில்
கருதின்
அவனே
துணையாய்
வருவான்
தொழுவாய்
மனமே...1
சுகமும்
துயரும்
தொடரும்
நிழலாய்
இகமீ
தினிலே
இறையுன்
பதமே
புகலாய்
அடைவேன்
புனிதா
எனவே
அகமே
உறைவான்
அறிநீ
மனமே...2
துணியாய்
பிறைசேர்
சுருளார்
சடையன்
அணியாய்
நெளியும்
அரவேற்
றிடுவான்
பிணியாய்
வினைசூழ்
பிடியே
அகலப்
பணிவாய்
அரனின்
பதமே
மனமே...3
புனலே
வளிவான்
புவியே
கனலே
எனவே
அடியார்
இசைவாய்ச்
சரமாய்ப்
புனையும்
கவியில்
பொலியும்
இறைதாள்
தனையே
நிதமும்
தரிநீ
மனமே...4
உலவும்
பிறையோ
டுரகம்
பொலிவாய்
நிலவும்
தயையில்
நிறையும்
குழகன்
இலதென்
றுளதென்
றெவையும்
சிவனே
வலவன்
துணைதாள்
வரிநீ
மனமே...5
விதியோ வினையோ வெருவா திருநீ
நிதியா யருளே நிமலன் தருவான்
சதிராய் நடமே தகவாய்ப் புரியும்
கதிதாள் துதியில் கரைவாய் மனமே...6
மருவில் மதியன் மணிசேர் மிடறன்
பொருதீ வினையை பொடிசெய் திடுவான்
தருஆல் நிழலில் தவமே புரியும்
குருதா ளினையே குறிநீ மனமே...7
பொறியில் படுமைம் புலனும் அடையும்
வறிதாம் மடமே வழுவாய் மலியும்
நெறிசேர் வழியே நிமலன் அருளே
அறிவாய் மனமே அணியார் பதமே...8
வறிது = அறியாமை
தலைமேல் அரவும் தவழும் நிலவும்
அலைபாய் நதியும் அழகாய் மிளிரும்
மலைமேல் நடமே வகையாய்ப் புரிவான்
நிலைபேர் அருளே நினைநீ மனமே...9
ஒருதத் துவமும் உரையார் எனினும்
உருகிக் கனியும் உளமே குடிலாம்
மிருகத் ததளே விழையும் உடையான்
அருளைத் தருதாள் அடைநீ மனமே...10.