'தனத்தன தனத்தன தனத்தன தனத்தன
தனத்தன தனத்தன .. தனதான'
அரிக்கிற வினைத்தொடர் அறுத்திடு திறத்தஉன்
...அடித்தொழு பவர்க்கருள் ..புரிவாயே
கரிக்கிற விழித்துளி அருச்சனை எனப்பெறு
...கரத்துடை பலிக்கலன் ..உடையோனே
தரிக்கிற பொடித்துகள் தளர்ச்சியை விடுத்திடும்
...சடைத்தலை வனப்புடன் ..மிளிர்வோனே
சிரிக்கிற முகத்தொரு விழிச்சுடர் படைத்தவ
...திருக்கழு மலத்துறை .. பெருமானே! … 1
குவைத்திரள் மணிச்சுடர் சுவைக்கனி உனைத்தொழும்
...குவிக்கையில் மதுப்பொழி .. மலர்தூவி
பவத்தளை விடுத்திடும் அருட்புனல் விழிக்கதிர்
...படைத்தவ கழற்புணை..தருவாயே
தவத்தினில் நிசப்தமும் ஒலித்திடும் குருத்துணை
...தனைப்பெறு நலத்தினை.. அருளாயே
சிவத்துறு அறத்துணை உமைக்கருள் கொடுப்பவ
...திருக்கழு மலத்துறை.. பெருமானே! … 2
No comments:
Post a Comment