'தன தனதந்த தத்தத் தனதன தானன தானதத்தா'
இழை
இசைகின்ற
முத்துச்
சுடரொளி
மேவிய
தோளசைத்தே
குழை
யசைகின்ற
நட்டத்
தினிலிசை
நாதமொ
டாடலுற்றாய்
உழை
யிசைகின்ற
சக்திக்
கனலுமை
யாளவள்
தேவுனக்கே
விழை
விசைகின்ற
சித்தத்
தெளிவினை
யேயருள்
மாசறுத்தே.
இழை = ஆபரணம்,அணிகலன்.
உழை = பக்கம்.
குழை = காதணி.
விழைவு = நாட்டம்.
------------------------------------------------------------------------------
(தனந்
தனதன
தந்த
தனன
தனத்தத்
தனதனன)
நிதம்
சதிரினில்
விஞ்சை
எழிலில்
நடத்தைத்
தருமிறைவன்
பதம்
கதியென
நெஞ்சில்
அவனை
நினைக்கத்
துயரொழியும்
விதம்
சதியினில்
மிஞ்சும்
வினையை
அழித்துக்
கருணைசெய
சதம்
பதிகிற
அன்பின்
உருவன்
இருக்கப்
பயமிலையே!
-------------------------------------------------------------------------------
திருநின்றவூர்
தத்ததன
தத்ததன
தத்ததன
தத்ததன
தத்ததன
தத்ததன
தத்ததன
தத்ததன
தத்ததன .. தந்த
தான
கத்துமொலி
தத்துதிரை
சுற்றிவரும்
....இத்தரையி
லுற்றவுயிர்
அத்தனையும்
....உத்தமநின்
சத்தியினில்
வைத்திடுவை....மங்கைபாகா
எத்தனைவி
தப்பிறவி
யுற்றழுது
....மத்துறுத
யிர்க்கடைத
லுற்றநிலை
....அப்பிலெழு
மொக்குளென
விட்டழிய....நொந்தபோதும்
நித்தியமில்
மித்தையறு
அத்தனுனை
....உத்திநிறை
சித்தமொடு
பற்றிடவும்
....நித்தமுநி
னைத்துரைசெய்
அக்கரமொர்....ஐந்துமானாய்!
புத்தமுத
நற்கவிதை
இக்குநிகர்
....சொற்றமிழில்
நெக்குருக
வைத்தமறை
....பெற்ற
தவர்
நிற்பணியும்
பொற்புடைய....நின்ற
ஊரே!