புளிமா
புளிமாங்காய் (வஞ்சித்துறை)
பொலிவெண்
பொடிசூடும்
பலிதேர்
பரங்குன்றன்
நலிவாம்
நவைதீர்ப்பான்
வலிகொள்
மனந்தந்தே....1.
புரியா
மயல்தீரப்
புரிநீ
மடநெஞ்சே
விரியார்
சடை
ஈசன்
பரிவான்
பரங்குன்றே....2.
சிரமோர்
மதிசூடி
கரமோர்
அருளாசி
வரமாய்த்
தருமீசன்
பரமன்
பரங்குன்றே... 3.
நண்ணா
வினைத்துன்பம்
பெண்ணோர்
புறங்கொண்டான்
நண்ணி
நினைநெஞ்சே
பண்பன்
பரங்குன்றே...4.
பொதியாம்
வினைத்தீரப்
பதிவாய்
மனமேநீ
கதிதாள்
பெறச்செய்யும்
பதியாம்
பரங்குன்றே....5.
பிணிஊழ்ப்
பிடிநீங்க
மணிஆர்
மதிதன்னை
அணிவான்
அடிநாடிப்
பணிவாய்
பரங்குன்றே....6
விரைநன்
மலர்தூவி
குரைசெய்
கழல்பாடும்
பரமன்
அடியார்கள்
பரவும்
பரங்குன்றே....7
குரை = ஒலி
விரை = மணம்.
திங்கள்
சடைக்கன்பர்
துங்கத்
தமிழ்பாடும்
மங்கை
உமையாளின்
பங்கன்
பரங்குன்றே....8
பெற்றம்
அமர்வோனாம்
நெற்றி
விழியானைச்
சுற்றம்
எனுமன்பர்
பற்றும்
பரங்குன்றே....9
துகளாய்
வினைதீர்க்கும்
புகலாம்
கழல்வேண்டின்
இகமாய்ப்
பரமாகும்
பகவான்
பரங்குன்றே....10
No comments:
Post a Comment