பெற்ற
பயன் - (ஒருபா
ஒருபஃது)
(அந்தாதியாக
மண்டலித்து
வரும் 10 நேரிசை
வெண்பாக்கள்)
சிறப்புறத்
தில்லையில்
செய்நடம்
பேறாம்
பிறப்பிறப்
பொன்றிலாப்
பெம்மான்!-- மறைப்பாத்
திறக்கும்
திருக்கதவம்
தெய்வசம்
பந்தன்
கறைக்கண்டன்
தாள்தொழுமென்
கை.
கைலைப்
பதியவன்
காலனைச்
செற்றவன்
மெய்யருள்
செய்யும்
விமலனாம்!-- தையலாள்
மைவிழி
தேவி
மகிழ்நன்
தலந்தொறும்
கைதொழச்
செல்லுமென்
கால்.
காலெடுத்
தாடிடும்
கம்பீரன்
நீலனாம்
மாலயன்
காணா
மலையொளியாம்!-- பாலனாம்
வேலவன்
தாதைக்கு
விண்ணோர்
இறைவனுக்குச்
சாலவும்
தாழும்
தலை.
தலையில்
அலைநதி
தாங்கிடும்
அண்ணல்
கலைமதி
ஆர்பரன்
காப்பான்! -- குலைவில்
நிலையுறு
பக்தியில்
நிற்கும்
சிவனைக்
கலிதீரக்
காணுமென்
கண்.
கண்ணுதல்
தெய்வக்
கருணை
நெகிழ்வுற
எண்ணிட
ஓடிடும்
இன்னலாம்-- பண்ணொடு
சேர்கிற
இன்னிசையில்
செஞ்சடையன்
வான்புகழ்
சீர்தனைக்
கேட்கும்
செவி.
செவியில்
மணியொலிக்கத்
தேவன்
அருள்வேண்டிக்
குவியும்
அடியவர்க்
கூட்டம்-- கவியுமெய்
அன்பில்
அகப்படும்
ஆண்டவன்
நாமத்தை
நம்பி
செபிக்குமென்
நா.
நானா
விதப்பூவில்
நற்றூபப்
பூசனையில்
ஆனாத
அன்பருளும்
ஆண்டவன் -- வானார்ந்தத்
தீச்சுடர்க்
கற்பூரச்
செம்மணக்
காற்றையே
மூச்செனக்
கொள்ளுமென்
மூக்கு
மூக்கின்
உயிர்ப்பினில்
மூங்கில்
துளைப்பண்ணில்
நாக்கின்
மொழியினில்
நம்பனுளான் -- பாக்களில்
ஆழ்ந்த
பொருளாய்
அருள்பவன்
தாளிடை
வீழ்ந்து
பணியுமென்
மெய்.
மெய்யினில்
வெண்ணீறு
மேவிட
அஞ்சலருள்
கையில்
கனலேந்தும்
கைலாயன் -நைய
அலைந்திடும்
ஓடுடை
அரனின்
தயையே
நிலையாய்
நினையுமென்
நெஞ்சு.
நெஞ்சில்
நினைந்து
நெடுஞ்சாண்
கிடையாகத்
தஞ்சமவன்
என்றே
சரணடைவம்--விஞ்சையருள்
புனிதன்
தாளினைப்
போற்றிப்
பணியும்
மனிதப்
பிறவி
சிறப்பு.
No comments:
Post a Comment