('மாங்கனி
மாங்கனி
மாங்கனி
மா' - வாய்பாடு.
1-4 சீர்களில்
மோனை)
மடமாகிய
அறியாமையின்
பிழையாவையும்
மறைய
நடமாடிடு
இறையோனினை
வாலேயுளம்
நயந்தும்
இடமேவிய
உமையாளரன்
துணைநாடிட
இனிதே
அடைவார்வினை
அறுமேஇனி
இலையோர்பிறப்
பவர்க்கே....1.
பொழுதாகவும்
நொடியாகவும்
சுழன்றோடிடும்
புவியில்
வழுவேமலி
அவமாயையில்
தடுமாறிட
மலைந்து
விழுவேனெனை
தடுத்தேயருள்
செய்வாயென
வேண்டி
அழுவார்வினை
அறுமேஇனி
இலையோர்
பிறப்
பவர்க்கே....2.
மணைமீதமர்
இளையோன்மணம்
தடுத்தாட்கொள
வந்தே
பிணைநீஎன
தடியானென
அருளேசெயும்
பெம்மான்
அணைமீறிடு
அன்பாலுன
தடியேபிடித்
தழுதே
அணைவார்வினை
அறுமேஇனி
இலையோர்பிறப்
பவர்க்கே....3.
(சுந்தரரைத்
தடுத்தாட்கொண்டது.)
மழைக்கேங்கிடும்
பயிராகவுன்
தயையேஉறு
வரமாய்க்
கழைக்கூத்தெனும்
புவிவாழ்விலுன்
கழல்பாதமே
கதியாய்ப்
பிழைக்கேப்பிறப்
பெடுத்தேனுன
தருளேபெரும்
பேறென்
றழைப்பார்வினை
அறுமேஇனி
இலையோர்ப்பிறப்
பவர்க்கே....4.
துளியேபிறை
அணிவார்சடை
யொளிர்பூஞ்சரம்
இலங்கக்
கிளிதோளமர்
வடிவாள்கயல்
விழியாள்துணை
அரனே
களியாய்நட
மிடுவாய்சிவ
பரனேஎனைக்
காவென்(று)
அளிவார்வினை
அறுமேஇனி
இலையோர்பிறப்
பவர்க்கே....5.
மணியேசுடர்
ஒளியேஅரு
வுருவேசிவ
பரமே
தணியாத
உன்
சினத்தால்நுதல்
விழியால்மதன்
எரித்தாய்
அணியார்கழல்
பதம்நாடிடத்
திருநீற்றினைத்
துலங்க
அணிவார்வினை
அறுமேஇனி
இலையோர்பிறப்
பவர்க்கே....6.
நறைபூமலர்ச்
சரமீசனின்
திருத்தோளினில்
இசைய
பிறைசூடிடும்
சடையோன்கழல்
செயுமாடலைக்
கண்டு
நிறைவாகிய
மனமோடிறை
அரன்பேர்புகழ்
வாயால்
அறைவார்வினை
அறுமேஇனி
இலையோர்பிறப்
பவர்க்கே....7.
இகத்தேபெறும்
துயர்யாவையும்
துகைத்தோட்டிடும்
எம்மான்
செகத்தேஉள
அடியார்மனக்
குடிலேஉறை
தெய்வம்
மிகத்தானெனக்
கருளேசெயும்
இறைவாஎன
வேண்டும்
அகத்தார்வினை
அறுமேஇனி
இலையோர்பிறப்
பவர்க்கே....8.
தமர்தானென
எமர்தானென
உய்ர்ந்தாரெனச்
சாடும்
சமர்மேவிய
புவிமீதமை
உறுசாந்தியைத்
தருவோன்
நமர்தான்சிவ
பஞ்சாக்கரன்
திருப்பாதமே
நம்பி
அமர்வார்வினை
அறுமேஇனி
இலையோர்பிறப்
பவர்க்கே....9
சுமையாகிடும்
வயதாகிட
வருவானரன்
துணையாய்
நமையாளுமெய்
இறையோனவன்
திருத்தாளினை
நாடி
இமையோரவர்
அருளேயென
நறும்பூமலர்
இட்டே
அமைவோர்வினை
அறுமேஇனி
இலையோர்பிறப்
பவர்க்கே....10.
No comments:
Post a Comment